• SPARKLES | மினுமினு

சென்னையில் உருவாகிறது தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம்!


- ரமேஷ் சுந்தரம்





சென்னை எழும்பூரில் முன்பு இருந்த காவல் ஆணையர் அலுவலகம் தற்போது புனரமைக்கப்பட்டு தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூரில் 178 வருடப் பழமையான காவல் ஆணையர் அலுவலகம் இடப் பற்றாக்குறை காரணமாக வேப்பேரியில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து எழும்பூரில் உள்ள பழைய கட்டிடம் 7 கோடி ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலிருந்து தற்போது வரை காவலர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், காவலர்களின் சிறப்பு ஆயுதங்கள், புகழ்பெற்ற சம்பவங்களின் புகைப்படங்கள் என காவல்துறையின் பல்வேறு சிறப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் ரோந்து பணிக்காக காவலர்கள் பயன்படுத்திய 4 சக்கர வாகனம், உயரதிகாரிகளின் அந்த கால சொகுசு வாகனம் ஆகியவை அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் நம்மை வரவேற்கின்றன. உள்ளே 1982ல் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சென்னை காவல் துறையினர் கைது செய்த புகைப்படம், பிரதமர் ராஜீவ் காந்தி கடைசியாக சென்னை வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டதும் காவல்துறை அதிகாரி விஜயகுமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் என்று பொக்கிஷமான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

மேலும் வெடிகுண்டுகளை கண்டறிய காவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், பல ரக துப்பாக்கிகள், 1939-ம் ஆண்டில் இருந்து காவலர்களுக்கு வழங்கப்பட்ட உயரிய பதக்கங்கள், காவல்துறையால் மீட்கப்பட்ட பண்டைய கால வாள்கள் மற்றும் சிலைகள், காவலர்கள் பயன்படுத்தும் பேண்ட் வாத்தியங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.உட்பட காவல் துறையினர் பயன்படுத்தும் பல பொருட்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. பலகோடி ரூபாய் மதிப்பில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை எழும்பூரில் தயாராகி வரும் இந்த காவலர் அருங்காட்சியகம் ஒருசில மாதங்களில் மக்கள் பார்வைக்கு வரவுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :