• TRENDING | பர பர

நடை பயிற்சி செல்லும் கோயில் யானை: ஶ்ரீவில்லிபுத்தூரில் மகிழ்ச்சி!





தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் பல ஊர்களிலும் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை மீண்டும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா. என்ற பெயருடைய யானையை கிருஷ்ணன் கோயில் பகுதியில் வைத்து பராமரித்து வருகின்றனர். தினசரி அதிகாலை கோயிலில் நடக்கும் விசுவரூப தரிசனத்திற்காக அங்கிருந்து வரும் கோயில் யானை, பின்னர் மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வருவது வழக்கம். அப்போது பக்தர்கள் யானைக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ச்சி அடைவர்.

இந்நிலையில், கொரோனா பரவலால் யானை நடைப்பயிற்சி செல்வது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால், யானை மீண்டும் தினசரி நடைப்பயிற்சி செல்கிறது. இது அப்பகுதி மக்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :