• TRENDING | பர பர

’தல’ தோனி..தளபதி விஜய் சந்திப்பு! வைரல் புகைப்படம்!





இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் சமீபத்தில் சந்தித்தது ட்ரென் ஆகியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்லது.

நடிகர் விஜய் தற்போது "பீஸ்ட்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அதே பகுதியில் தோனி நடிக்கும் ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தோனி வந்து நடிகர் விஜயை சந்தித்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், தோனி - விஜய் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திற்குள் மதுரை வடக்கு மாவட்ட மாநகர் இளைஞரணி ரசிகர்கள் ஒட்டியுள்ள அதிரடி போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், தோனி - விஜய் அருகருகே இருக்கும் படத்தை வைத்து, தோனி படத்தின் அருகே "PM" என்றும், விஜய் படத்தின் அருகே "CM" என்றும், "ஆளப் போகும் மன்னர்கள்" எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

விஜயை அரசியலுக்கு இழுக்கும் நோக்கில் மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அதனைத், தொடர்ந்து இப்போது தோனியுடன் இணைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரும் வைரலாக துவங்கியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :