• TRENDING | பர பர

கிளியைக் காணோம்: கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம்!





ராமநாதபுரத்தில் தாங்கள் பிரியமாக வளர்த்த கிளி காணாமல் போனதால், அதன் புகைப்படம் அச்சிட்ட நோட்டீஸ் ஒட்டி, அமீன் என்பவர் தேடி வருவது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம்: கேணிக்கரை தீரன் திப்பு சுல்தான் பகுதியை சேர்ந்த 42 வயது அமீன் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பறவைகள் மீது கொண்ட ஆர்வத்தால், தனது வீட்டில் ஏராளமான கிளிகளை வளர்த்து வருகிறார். இவர் கடந்த வருடம் சென்னைக்கு சென்றபோது, 40 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து "கிரிம்சன் பெல்லீட் கண்ணூர்" என்கிற அரிய வகை கிளியை வாங்கி வந்து வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அமீன் குடும்பத்தினர் அனைவரும் அந்த கிளி மீது அளவுகடந்த பாசம் வைத்து வள்ர்த்தனராம்.

இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக அந்த கிளியை கூண்டில் இருந்து திறந்து விட்டுள்ளார் அமீன். அப்போது வீட்டினுள் பறந்தபடி இருந்த அந்த கிளி திடீரென்று காணாமல் போய்விட்டது. இதனால் பதட்டமடைந்த குடும்பத்தார் அந்த கிளியை ஊர் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து `கிளியை காணவில்லை` என்று அதன் படத்துடன் நோட்டீஸ் அச்சடித்து ராமநாதபுரம் பகுதி முழுவதும் வீடுவீடாக சென்று கொடுத்துள்லனர்.

அந்த நோட்டீஸில் கிளியின் புகைப்படம், அதன் பெயர், அந்த கிளியின் காலில் கட்டப்பட்டுள்ள ஐடி எண் போன்ற விவரங்களுடன் அவர்களின் தொடர்பு எண்ணையும் கொடுத்துள்ளனர். மேலும், இந்த கிளி குறித்த தகவல்களை தெரிவித்தாலும், அந்த கிளியை தங்களிடம் ஒப்படைத்தாலும் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அமீன் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :