• TRENDING | பர பர

கல்யாண கோலத்தில் பூர்ணா!


-ராகவ் குமார்





நடிகை பூர்ணா தமிழ் படத்தில் அறிமுகம் ஆனாலும், அவரின் திறமை அக்கட தேசத்து மணவாடுகள் தான் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான ரோலில் சிறப்பாக நடித்து வருகிறார்.

தற்சமயம் தெலுங்கு, தமிழில் நடித்து வரும் ’’சுந்தரி’’ திரைபடம் பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்யாண கோலத்தில் இருக்கும் பூர்ணாவின் புகைப்படம் கதையை பற்றி பல அனுமானங்களை உருவாக்கி வருகிறது இது குடும்ப கதையா அல்லது சஸ்பென்ஸ் திரில்லர் கதையா என பரபரப்பை உருவாக்கி உள்ளது. பூர்ணாவும் தன் பங்கிற்கு அழகாகவும், வித்தியாசமாகவும் தெரிகிறார். எது எப்படி இருந்தாலும், அம்மணி கல்யாண கோலம் பூண்ட நேரம் நல்ல செய்தி வரட்டும் என்பது அவரது அபிமானிகளின கருத்து.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :