• TRENDING | பர பர

ஐஸ்கிரீம் சாப்பிட ஊருக்குள் ஹெலிகாப்டரை தரையிறக்கிய பைலட்!





கனடா நாட்டில் உள்ள டிஸ்டேல் நகரின் மையப்பகுதியில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று திடீரென தரையிறக்கப்பட்டது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அந்த மாகாணத்தின் மருத்துவ விமான ஆம்புலன்சின் சிவப்பு வண்ணம் அந்த ஹெலிகாப்டருக்கும் பூசப்பட்டிருந்தது. அதனால் அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவ வந்ததவது:

ஹெலிகாப்டரை இயக்கிய அந்த 34 வயது பைலட், ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதால் முன் அறிவிப்பின்றி அங்கு ஐஸ்கிரீம் கடை அருகே தரையிறக்கினார் என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பைலட் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அவரிடம் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான லைசன்ஸ் இருந்தாலும், பார்க்கிங் இல்லாத இடத்தில் அவர் அதனை இறக்கியதும், ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஒன்றும் அவசரத்தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நகரின் மத்தியில் ஹெலிகாப்டரை பைலட் நிறுத்திய சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :