• TRENDING | பர பர

ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!





டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 14-ம் தேதி தேநீர் விருந்து அளிக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இந்த தேநீர் விருந்து வைபவம் நடத்தப்படவுள்ளது.

அது என்ன உயர் தேநீர் (High Tea) உபசாரம்?

பிரிட்டனில் 19-ம் நூற்றாண்டில் செல்வந்தர்கள் உருவாக்கியது உயர் தேநீர் விருந்து உபசாரம். புதிதாக தொழில்மயமாக்கப்பட்ட பிரிட்டனில் தொழிலாளர்களுக்கு வேலை முடிவடையும் வரை தேநீர் குடிக்க முடியாது. நீண்ட நேரம் வேலை செய்து களைத்த பிறகு, தேநீருடன், பிஸ்கட் கேக் போன்றவற்றை மட்டும் கொரித்தால் போதுமானதாக இருக்காது. ஆகவே சற்று ஹெவியான சிற்றுண்டிகளுடன் தேநீர் வழங்குவது பழக்கபட்டது. இதுவே உயர் தேநீர் (High Tea) என்று சொல்லப்படுகிறது.

இன்றும், பிரிட்டனில் பலர் டின்னரை உயர் தேநீர் என்று சொல்லும் வழக்கம் உள்லது. இப்போது இரவு உணவை டின்னர் என்று சொன்னாலும் கூடவே தேநீரும் இடம்பெறும். அது வெறும் கேக் மற்றும் பிஸ்கட்டுடன் இல்லாமல், பலவகை உணவுகளுடன் சேர்ந்தே இருக்கும்.

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கவுள்ள உயர் தேநீர் (High Tea) விருந்திலும் தேநீர், காபி, பானங்களுடன் பலவகையான சிற்றுண்டிகளும் இடம்பெறும். பொதுவாக உயர் தேநீர் (High Tea) என்பது அனைவரும் கூடி பேசுவதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :