• TRENDING | பர பர

நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு: நயன்தாரா அறிவிப்பு!





தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரான நடிகை நயந்தாராவுக்கும் `நானும் ரௌடிதான்` பட இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் எப்போது திருமணம் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இப்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

நயன்தாராவுடன் காதல் குறித்த கேள்விக்கு, "எனக்கு அவர் நல்ல தோழி" என்று மட்டும் பதிலுரைத்தார் விக்னேஷ் சிவன். ஒருமுறை பிரபல கார்பரேட் நிறுவனம் நடத்திய பெண்கள் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்டது. அதற்காக அவர் நன்றி தெரிவித்த போது, ‘’விரைவில் நான் மணக்க இருக்கும் என்னுடைய காதலருக்கும் நன்றி’’ என்றார் நயன்தாரா. .இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதல் உறுதியானது.

இந்நிலையில் விஜய் டிவியில் வெளியாகவுள்ள பேட்டியில் இதுகுறித்து தெரிவித்துள்ளார் நயன்தாரா. இந்த பேட்டி ஆகஸ்ட் 15-ந்தேதி ஒளிபரப்பாக உள்ளது. அந்த பேட்டியின் பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அதில், தனக்கும் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதை உறுதிபடுத்தியுள்ளார் நயன்தாரா. விரைவில் இருவரும் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Twitter : https://twitter.com/i/status/1425030114404823042

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :