• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

பானிபூரி


கே. எஸ். கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தேவையானவை:

பானிபூரி பாக்கெட்- 1

புளி -எலுமிச்சை அளவு

புதினா இலை -சிறிதளவு

பச்சை மிளகாய் 4

கறுப்பு உப்பு (black salt) – 1 ஸ்பூன்

சாட் மசாலா - 1 ஸ்பூன்

வெல்லம் - சிறு கட்டி

மசாலா செய்ய:

கொண்டைக்கடலை - 100 கிராம்

(வேக வைத்து வைத்துக் கொள்ளவும்)

வெங்காயம் - 1

உருளைக்கிழங்கு -2 (வேக வைத்தது)

உப்பு – சுவைக்கேறப.

கரம் மசாலா -1/2 ஸ்பூன்

காரப்பொடி - 1 ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு.

செய்முறை:

புளியைக் கரைத்து உப்பு, பச்சை மிளகாய், அரைத்த புதினா இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் சாட் மசாலா, வெல்லம் சேர்த்து இறக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெந்த கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கரம் மசாலா, காரப்பொடி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.

குட்டி பூரியை லேசாக ஓட்டை போட்டு அதனுள் மசாலா 1 ஸ்பூன் வைத்து மேலே சிறிது ஓமப்பொடி தூவி புளி தண்ணீர் ஊற்றி பரிமாற வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் இது.

Comments

MALAPALANIRAJ says :

சூப்பர்.

Divya says :

Yummy Street style food always.. Loved it..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :