• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

ராகி மஞ்சூரியன்


உஷாமுத்துராமன், மதுரை.

தேவையானவை:

கேப்பை மாவு - ஒரு கப்

சோளமாவு. - அரை கப்

வெண்ணை - சிறிதளவு

ரெட் சில்லி சாஸ் - சிறிதளவு

சோயா சாஸ் - சிறிதளவு

ஒயிட் பெப்பர் பவுடர் - சிறிதளவு

டொமாட்டோ கெச்சப் - சிறிதளவு

மிளகாய் தூள் - சிறிதளவு

பூண்டு - தேவைக்கேற்ப

பெரிய வெங்காயம் - 2

சின்ன வெங்காயம் - தேவைக்கேற்ப

உப்பு, தக்காளி, - தேவைக்கேற்ப

எண்ணை – பொரித்தெடுக்க

செய்முறை:

முதலில் தக்காளி, பூண்டு சிறிதளவு மிளகாய் தூளை போட்டு பேஸ்ட் போல மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு கேப்பை, சோள மாவு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டையும் உப்பும் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைக்கவும். அதில் உரித்த சின்ன வெங்காயத்தை போட்டு மாவு எல்லா இடங்களிலும் படும்படி தோய்த்து எடுத்து காய்ந்த எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வெண்ணையை போட்டு நறுக்கிய பூண்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதில் சில்லி சாஸ் ஊற்றி கிளறி அத்துடன் ஒயிட் பெப்பர், உப்பு, டொமேட்டோ கெச்சப் மற்றும் அரை ஸ்பூன் சோயா சாஸ் ஊற்றி வதக்கி எடுத்தால் கிரேவி தயார்.

ஏற்கனவே பொரித்து வைத்துள்ள ராகி உருண்டைகளை கிரேவியில் போட்டு, அதன் மீது பொடியாக நறுக்கிய வெங்காயம் , கொத்தமல்லியை தூவினால் சுவையான “ ராகி மஞ்சூரியன் “ தயார். ஆரோக்கியத்துடன் வித்தியாசமான ருசியில் சாப்பிட அருமையாக இருக்கும்

Comments

MALAPALANIRAJ says :

அசத்தல் போங்க...! வார்த்தையே இல்லை.

Ghandhi says :

Nice

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :