• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

அவல் பொரி மிக்சர்.


ஜெயந்தி நாராயணன், திருவல்லிக்கேணி.

தேவையானவை:

அவல் பொரி, - 50 கிராம்.

வேர்க்கடலை - 50 கிராம்

பொட்டு கடலை - 50 கிராம்

முந்திரி -20

பாதாம் - 10

கொப்பரை - சிறு துண்டுகளாக வெட்டியது 20.

கருவேப்பிலை –சிறிது.

மஞ்சள் தூள் உப்பு தனி மிளகாய் தூள் அனைத்தும் தேவைக்கேற்ப

கடலெண்ணெய் – 2 டீஸ்பூன்.

கடுகு, பெருங்காயம் – 1 ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பாதாம் முந்திரி கொப்பரை வேர்க்கடலை பொட்டுக்கடலை அனைத்தையும் வறுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கருவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு கலந்து ஸ்டவ் அணைத்து விடவும். அதில் அவல் பொரி போட்டு கலக்கவும். வத்தல்களை பொரித்தும் கலக்கலாம்.மொறு மொறு சத்தான மிக்ஸர் ரெடி!.

Comments

MALAPALANIRAJ says :

டைம் பாஸ்க்கு ஏற்றது.மழைகாலம், குளிர்காலத்தில் தயாரித்து வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். தோழிக்கு வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :