• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

மசாலா பூரி


சுந்தரி காந்தி பூந்தமல்லி.

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,

கேரட் - 1

உருளைக்கிழங்கு - 2

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு,

சர்க்கரை - 1 டீஸ்பூன்.

செய்முறை

வேகவைத்த உருளைக்கிழங்கு ,கேரட், சிறிதளவு உப்பு, மிளகாய்த் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும். பின்னர் அத்துடன் கோதுமை மாவைச் சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

Comments

Bharathy Ghandhi says :

Arumai, masal puri arumai

SATHIYA BANU S says :

மசாலா பூரி சாப்பிடுவதற்கு அருமையான ஒரு உதிரி உணவு சுந்திாி காந்தி அம்மாவுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :