• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

கேப்பை பக்கோடா


என்.கோமதி, நெல்லை.

தேவையானவை:

கேப்பைமாவு 1கப்

அரிசிமாவு – 1 டேபிள்ஸ்பூன்

முருங்கை இலை- 1 கைப்பிடி

பச்சைமிளகாய் -3

இஞ்சி துருவல் -2 டீஸ்பூன்

உப்பு - திட்டமாக

நெய் – 2 டீஸ்பூன்

கடலை எண்ணெய் -200கிராம்.

செய்முறை:

வாணலியில் நெய்யை விட்டு காய்ந்தவுடன், முருங்கை இலையை பொரிக்கவும். ஒரு பெரிய கிண்ணத்தில் அதைப்போட்டு கேப்பை மாவு, அரிசி மாவு, உப்பு, இஞ்சிதுருவல், நறுக்கிய பச்சைமிளகாயை சேர்க்கவும். அந்த மாவை 5 நிமிடங்கள் பிரட்டி பிசையவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் பக்கோடாக்களாக உதிர்த்துப் போட்டு பொரிக்கவும். மொறுமொறு கேப்பை பக்கோடா ரெடி.தேங்காய் சட்னியுடன் ருசிக்க..செம..செம..தான்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

சிறப்பு....

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :