• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

குதிரைவாலி மிர்சி ரோல்ஸ்


மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

தேவையானவை:

வேக வைத்து மசித்த குதிரைவாலி சாதம்,-1/4கப்,

லேசாக வறுத்த கடலைமாவு-2கப்,

பொடியாக நறுக்கிய பஜ்ஜி மிளகாய்-1கப்,

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு-1/2 கப்,

சீரகம்-2 டீஸ்பூன்.

காஷ்மீரி மிளகாய்ப்பொடி-1/2 டீஸ்பூன்.

உப்பு, மல்லித்தூள், ஓமம்-தேவைக்கு,

துருவிய சீஸ்-1/4 கப்,

நறுக்கிய கொத்தமல்லி- அரை கட்டு

எண்ணெய்-பொரிக்க

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பிசையவும்.பின்னர் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவிலிருந்து, நீளமான சின்ன ரோல்களாக உருட்டி சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு,பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். குதிரைவாலி மிர்ச்சி ரோல்ஸ் தயார். சுடச்சுட இதை டொமெட்டோ சாஸ்,புதினா சட்னி யுடன் பரிமாறவும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :