• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

வெஜிடபிள் ராகி பகோடா


ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

தேவையானவை:

கேழ்வரகு மாவு 200 கிராம்,

அரிசி மாவு 50 கிராம்,

பட்டர் 3 டீஸ்பூன்,

உப்பு தேவைக்கேற்ப,

தோல் நீக்கி துருவிய இஞ்சி 1 டீஸ்பூன்,

மிக பொடிசா நறுக்கிய கோஸ், பீன்ஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, முருங்கை இலை, உருளைகிழங்கு (வெஜ்டபிள்ஸ் எல்லாம் சேர்ந்து 200 கிராம் அளவு ),

சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,

இரண்டாய் உடைத்த முந்திரி 10,

பொரிக்க எண்ணெய்.

செய்முறை :

எண்ணெய் தவிர, மேலே கூறிய அனைத்து பொருளையும் பாத்திரத்தில் போட்டு லேசாக நீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிசைந்த கலவையை எடுத்து எண்ணையில் பொலபொலன்னு பகோடா மாதிரி உதிர்த்து விடவும். நன்கு கரகரப்பா வெந்ததும் எடுத்திட, சுவையோடு சத்து மிகுந்த வெஜ் ராகி பகோடா தயார்!

Comments

Kavitha says :

Very use full for me

Sangeetha Sundhar says :

Awesome Recipe. Innovative new healthy dish.

Krishnaveni says :

Very good for health. recipe is very very Useful

எம். வசந்தா. says :

சத்தான எளிதில் செய்யலாம் சூப்பர் ருசி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :