• TRENDING | பர பர

1 ஆட்டுக் குட்டியின் விலை ரூ. 1 கோடி! விற்பனையில் சாதனை!





அயர்லாந்தில் ஒரு ஆட்டுக்கிடாய் 1 கோடி ரூபாயை தாண்டி விற்பனையாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அயர்லாந்தில் ரிச்சர்டு தாம்சன் என்ற விவசாயி Suffolk வகை ஆட்டுக்குட்டியை வளர்த்து வந்துள்ளார். இக்கிடாய் பிறந்து 7 மாதங்கள் ஆன நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று சந்தைக்கு விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், அந்த ஆட்டுக்குட்டி 44,000 யூரோக்களுக்கு ( இந்திய மதிப்பில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய்) விற்பனை ஆகியுள்லது. அயர்லாந்தில், ஒரு ஆடு இவ்வளவு தொகைக்கு விலை போயிருப்பது இதுதான் முதல் முறை.

ரிச்சர்டு இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது.

என் ஆடு அதிக தொகைக்கு விற்கப்படும் என்பது தெரியும். ஆனால், இவ்வளவு தொகைக்கு விற்பனையாகும் என்று நினைக்கவில்லை. இதுபோன்ற விஷயங்கள் வாழ்க்கையில் எப்போதாவது தான் நிகழும்

-இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு அயர்லாந்தில் இருக்கும் கொலரைன் பகுதியை சேர்ந்த டென்னிஸ் டெய்லர் என்ற விவசாயி தலைமையிலான குழு தான் இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளது. அதாவது இந்த ஆடு பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாராம். அடேங்கப்பா!

Twitter : https://twitter.com/i/status/1423403446347079682

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :