• SPARKLES | மினுமினு

‘இளைய திருநாவுக்கரசி’ யாழினி பராக்!


- கட்டுரை: மதுரை ஆர்.கணேசன்

சமீபத்தில் யூடியூப் பார்வையாளர்களைக் கவர்ந்து “அட..யாரு இந்த பொண்ணு.. சூப்பரா பேசுதே...” என்று லைக்ஸ் அள்ளுகிறார், 11 வயது சிறுமியான ப.யாழினி. சிறந்த பேச்சாளர், கதைசொல்லி, கவிஞர் என்று பன்முகத் திறமையாளரான யாழினி, இதுவரை 20-க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள், பண முடிப்புகள் பெற்றுளார். இவரது பேச்சுக்கள் சமூக வலைதள மேடைகள், மற்றும் காணொளிகள் வாயிலாக உலா வருகின்றன. ‘இளைய திருநாவுக்கரசி’ உள்ளிட்ட பட்டங்கள் பல பெற்றியிருக்கிறார்.

யூடியூபில் கம்பரும் அன்னப்பறவையும், அன்னையர் தினம், ஒரு சொல் கேளீர், மனிதம் எங்கே? பசியின் வலி, ஈகைத் திருநாள், காஞ்சி காமாட்சியின் பெருமை, பெரிய புராணம், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற பல்வேறு தலைப்புகளில் யாழினி பேசி அசத்துவது கேட்டு ஆச்சரியமடைய வைக்கிறது.

சென்னை, அம்பத்தூரில் உள்ள எபினேஸர் மார்க்கஸ் பன்னாட்டு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் யாழினிக்கு திருவாசகம், திருப்புகழ், பெரியபுராணம், ஆழ்வார்கள், என அனைத்தும் அத்துப்படி!

இந்த சின்ன வயதில் எப்படி இந்தளவு திறமை சாத்தியமாயிற்று?

‘’லாக்டவுன் காரணமா, ஸ்கூல் லீவு விட்டு, வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியாதாச்சு.. இல்லையா? அப்போதான் இதையெல்லாம் கத்துக்கிட்டேன்..’’ என்று சிம்பிளாக சொல்கிற யாழினியின் பேச்சாற்றலுக்கு காரணம் – அவரது பெற்றோர். டிவி-யில் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் நகைச்சுவை நடிகரும் பேராசிரியருமான பழனியும் அவரது மனைவியும் பேராசிரியருமான சங்கீதாவும்தான் யாழினியின் பெற்றோர்.

யாழினியிடம் ஒரு மினி பேட்டி எடுத்தோம்..

’’எந்த வயசிலிருந்து பேசுறீங்க?’’

’சின்ன வயசுல அம்மா பேசும் பட்டிமன்றங்களில் பேசும்போது, என்னையும் பேசச் சொல்லுவாங்க... அதிலிருந்து பேச ஆரம்பிச்சேன்’’

’’உங்களுக்கு எந்த தலைப்பில் பேச ரொம்ப பிடிக்கும் ?

’’தமிழ் இலக்கியம், கம்ப இராமாயணம் சிலப்பதிகாரம் பிடிக்கும். அதேசமயம் நகைச்சுவையா ஜாலியா பேசணும்னு விரும்புவேன்’’

,

’’சிறந்த பேச்சாளர் ஆகணும்னா என்ன செய்யணும்?’’

‘’தமிழ் புத்தகங்கள் நிறையா படிக்கணும். உச்சரிப்பில் கவனமா இருக்கணும், பேசிப் பேசி பயிற்சி எடுத்துக்கிடனும்’’ என்று சொல்லி சிரிக்கிறார்.

’’தொடர்ந்து எவ்வளவு நேரம் பேசுவீங்க?’’

ஒருமணி நேரம் பேசுவேன். மேலும் பேச பயிற்சி எடுத்துகிறேன்,

’’மேற்படிப்பு என்ன படிக்கணும் ஆசை ?

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆகணும் அதற்காக நிறையா கல்வெட்டுகள் பார்த்து போட்டோ எடுத்து வச்சுருக்கிறேன் அதையெல்லாம் படிக்க கத்துக்கிறேன்.’’

உங்க தோழிகள் என்ன சொல்லுவாங்க ?

“ நல்லா பேசுறேன்னு சொல்லுவாங்க. நான் நல்லா பாடுவேன், டான்ஸூம் ஆடுவேன்.. தெரியுமா?’’

- விழிகள் மலரச் சொல்கிற யாழினிக்கு பேச்சுக்கலையில் தன் பெற்றோரைப் போலவே வர விருப்பமாம். யாழினி பேசுவதை அமைதியாக ரசித்துக் கேட்டுகொண்டிருந்த அவரது பெற்றோரிடம் பேச்சுக் கொடுத்தோம்..

’’நானும், என் கணவரும் பேச்சாளராக இருக்கிறதால எங்கள் மகளிடம் இதைத் திணிக்கிறோமோ என சிலர் நினைப்பாங்க ஆனால் அப்படியெல்லாம் கிடையாது. இது அவள் விருப்பம்தான்!’’ என்று சொல்ல ஆரம்பித்தார் யாழினியின் அம்மா சங்கீதா.

’’யாழினி ஒண்ணாவது படிக்கும்போது கதை சொல்லும் போட்டியில் கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்கிட்டு வந்தாள். அதுதான் ஆரம்பம். அவளுக்கு பேச்சுக்கலையில் ஆர்வம் வந்தது. உடனே அவளுக்கு பயிற்சி கொடுத்தோம். திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்கள் வாங்கி கொடுத்து படிக்க சொன்னோம் லாக்டவுன் காரணமா ஸ்கூல் விடுமுறையில் வீட்டில் இருந்தப்ப மேலும் தீவிரமாக கற்க ஆரம்பித்தாள்’’ என்று சங்கீதா சொல்லி முடிக்க, யாழினியின் தந்தை பழனி தொடர்ந்தார்.

‘’அவளுக்கு தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு இருக்கிறது எங்களுக்கு ஆர்ச்சர்யமா இருந்தது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பற்றி பேசுவதற்கு ஆர்வமா இருந்தாள். ஒரு முறை ஆழ்வார்கள் மன்றத்தில் ‘அன்பு’ என்ற தலைப்பில் அரைமணி நேரம் பேசுவதற்கு அழைப்பு வந்தது அதற்கு எழுதி கொடுத்து எந்த மாதிரி பேசணும்னு பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்தினோம். அவளும் நல்லா பேசிவிட்டு வந்தாள். இப்போதும் லாக்டவுன் தொடர்வதால் மேடையில் பேசுறதுக்கு வாய்ப்பு இல்லை அதனால “ஆன்லைன்” போட்டிகளில் பங்கேற்று நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறாள். அவளுக்கு தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடு இருப்பதும் எங்களூக்கு ஆச்சரியம்தான். கோயிலுக்கு போனா கூட அங்குள்ள சிற்பங்கள், கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் பற்றி பேசுவாள். கல்வெட்டுகளை போட்டோ எடுத்து வந்த தன் நோட்டுல ஒட்டி வச்சுப்பாள். அந்தளவிற்கு அத்துறை அவளுக்கு பிடிச்சிருக்கு இப்படி மகளுக்கு பிடிச்சதையெல்லாம் செய்கிற போது எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கிறது...” என்றார் பழனி.

கல்கி ஆன்லைனுக்காக ஸ்பெஷலாக யாழினி தேவாரம் ‘பூவார் மலர் கொண்டு’ பாடலும், சிலப்பதிகாரத்தில் இடம் பெரும் “ சேரா மன்னா செப்புவது உடையேன்” என்கிற காட்சியை பேசி அசத்தியிருக்கிறார். அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டு மகிழுங்கள்.

Comments

Prabha says :

God gifted child.. Even adults will struggle to with such dialogues the child has rendered it very nicely

லதானந்த் says :

மிகவும் அற்புதம். இவள் ஒரு ஞானக் குழந்தை. பல்வேறு சிறப்பு மகுடங்கள் இவள் சூடக் காத்திருக்கின்றன.

Padmini Pattabiraman says :

Excellent voice modulation. Clear diction. Vast knowledge. She will reach heights.

Sheela says :

Talented children, very nice to see children getting exposed to such historical stories ,and getting involved and rendering the dialogues with passion and dedication.

சுபா தியாகராஜன் says :

தமிழ்க்கடவுள் முருகனினின் அருள் பெற்ற சிறப்புக் குழந்தை...ஆன்மீக சொல்லி தேசமங்கையர்கரசி போல் நீடு புகழ் பெறுவாள். வாழ்த்துகள்.

G.Ravindran says :

Just a glimpse of Kannagi`s fiery speech in the King`s court in the epic `Silappadikaram` gives us an idea of this child`s immense talent. She will go a long way...

Jayanti Sundar Rajan says :

Absolutely marvellous! What a clarity!! God has given this young girl immense talent!! Will go a long way!

Sujatha says :

Very gifted child. It is very heartening to see young children take interest in Tamil literature and temple architecture.God bless the child.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :