• TRENDING | பர பர

பிசாசு-2 திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!





இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் பாத் டப்பில் ஆண்ட்ரியா படுத்திருக்கும் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின் 2020 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினார். நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை முதல்பார்வை இன்று வெளியானது. திகில் படமான இதில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் ஆடை இல்லாமல் நடித்துள்ளார் என கூறப்பட்ட நிலையில், இந்த போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.

ஒரு பெண் பாத் டப்பில் ஆடையின்றி படுத்திருக்க, அவரது கால்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. கையில் சிகரெட் வைத்துள்ளார். திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பிசாசு 1 போலவே இந்த படமும் கவர்ச்சி, திகில், சஸ்பென்ஸ் நிறைந்து பட்டையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :