• TRENDING | பர பர

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஆகஸ்ட் 15-ல் அறிமுகம்!





ஓலா எலெக்ட்ரிக் வாகனம் ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். அந்த தினத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் ஜூலை 15-ம் தேதி இந்த வாகனத்துக்கான முன்பதிவு அறிவிக்கப்பட்டது. ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாகனத்தை வாங்குவதற்காக புக்கிங் செய்ததாக தகவல் வெளீயானது. .

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலையில், 10 வண்ணங்களில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழுமையான சார்ஜ் ஏற்றும் பட்சத்தில் 100 கிலோ மீட்டர் முதல் 150 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீரியஸ் எஸ், எஸ் 1 மற்றும் எஸ்1 புரோ ஆகிய பெயர்களில் இந்த வாகனம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :