• TRENDING | பர பர

7 புத்தகங்கள்: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தவை!





தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு 7 புத்தகங்களைப் பரிசளித்தார்.

அந்த புத்தகங்கள் என்ன என்று தெரியுமா?

உலகப் பொதுமறையான திருக்குறளின் ஆங்கிலப் பதிப்பு, ஜல்லிக்கட்டும் அதில் பின்னிப் பிணைந்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சி.சு.செல்லப்பாவின் `வாடிவாசல்` நாவல், கி.ராஜநாராயணனின் `கரிசல் கதைகள்` (ஆங்கிலத்தில் Along with the sun என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது), ராஜம் கிருஷ்ணன் எழுதிய, `சுழலில் மிதக்கும் தீபங்கள்` (LAMPS IN THE WHIRLPOOL) என்ற மொழிபெயர்ப்பு புத்தகமும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், நாட்டின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றான நீல.பத்மநாபனின் `தலைமுறைகள்` நாவல் (Generation என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது), தி.ஜானகிராமன் எழுதிய `செம்பருத்தி` என்ற நாவல் (கிரிம்சன் ஹைபிஸ்கஸ் என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது), கே.ராஜன் ஆங்கிலத்தில் எழுதிய `பண்டைய எழுத்து முறை` என்ற நூல் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்கு சட்டமன்றத்தில் பரிசாக அளித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :