• TRENDING | பர பர

தங்கப் பதக்கத்தை ஷேர் பண்ணிக்கிறோம்: ஒலிம்பிக்ஸில் உன்னதம்!





உலகம் முழ்வதும் விளையாட்டு வீரர்களின் பெருங்கனவு – ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வெல்வதுதான்! அப்படி கிடைத்த தங்கத்தை மற்றொரு வீரருடன் பங்கு போடுவதென்றால்?!

உலகமே வியந்துக் கொண்டாடும். அப்படியொரு சம்பவம் டோக்கியோ ஒலிம்பிக்கில் அரங்கேறியுள்ளது. உயரம் தாண்டுதல் போட்டியின் ஆடவர் பிரிவில் இத்தாலி வீரர் டம்பேரி மற்றும் கத்தார் நாட்டின் முத்தா எஸ்ஸா பர்சிம் ஆகிய 2 வீரர்களிடையே தங்கப் பதக்கத்தை வெல்ல கடும் போட்டி நிலவியது. இருவீரர்களும், 7 அடி 10 அங்குலம் உயரம் வரை தாண்டிவிட்டனர். இதற்கு அடித்தபடியாக, 3 முறை முயற்சி செய்தும் 2 பேராலும் அந்த உயரத்தை கடக்க முடியவில்லை. இதற்கிடையே, இத்தாலி வீரர் டம்பேரி காலில் சிறு காயமடைந்து சற்று சோர்வடைந்தார்..

அப்போது, Tie breaker சுற்று போலாமா அல்லது தங்க பதக்கத்தை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்களா என்ற கேள்வியை முன்வைத்தார் நடுவர். இருவரில் பதக்கம் வெல்ல கத்தார் வீரர் முத்தா எஸ்ஸா பர்சிமுக்கே வாய்ப்பு அதிகம். ஆனால், நொடிப்பொழுதில் அவர் செய்த செயல், ஒலிம்பிக் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையச் செய்துள்ளது.

வெற்றிமுகத்தில் இருந்தும், ‘’தங்கப் பதக்கத்தை பங்குபோட தயார்’’ என முத்தா எஸ்ஸா பர்சிஸ் அறிவித்தது தான் அதற்கு காரணம். நாடு, மொழி, மதங்களை கடந்து இருநாட்டு வீரர்களும், ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த காட்சி சமூக வைரலாக பரவி வருகிறது.

"அன்பே சிவம்" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்த `மனசுதான் சார் கடவுள்` என கமல்ஹாசன் பேசும் வசனத்துடன் ஒப்பிட்டு, இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :