• SPARKLES | மினுமினு

வீட்டை அழகாக்க பூக்களே போதுமே!


- சாந்தி கார்த்திகேயன்





பொதுவாக வீடுகளில் பூக்களையும், செடிகளையும் வைத்தால், அவை அழகை மெருகேற்றுவதோடு, இனிமையான நறுமணத்தையும் பரப்பும்.

வீட்டு ஹாலின் ஒரு மூலையில் ஒரு மண் ஜாடியில் சில பூங்கொத்துகளை அலங்காரமாக வைத்தாலே போதும். ஆடம்பரமான மற்ற இண்டிரியர் டெக்ரேஷன்கள் போன்றவை தேவைப்படாது. மேலும் மலர்களின் ரம்மியமான நிறுமணம் மனதுக்கு மகிழ்ச்சியூட்டும். புத்துணர்வைத் தரும்.

வீடுகளில் பூந்தொட்டிகள் மற்றும் பூச்செடிகள் வைக்கும் போது, வாஸ்துவின் அடிப்படையில் வைப்பது நல்லது. எந்தெந்த பூச்செடியை எப்பகுதியில் வைக்க வேண்டும்”

துளசிச் செடி:

புனிதமான செடியாகக் கருதப்படும் துளசி, பல வகை மருத்துவக் குணங்கள் நிரம்பப் பெற்றதும்கூட! வீட்டில் துளசிச் செடி வளர்த்தால் வீட்டில் உள்ளோருக்கு தனி எனர்ஜி கிடைக்கும். துளசிச் செடியை வீட்டின் பின்புறம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். அதனால் நமது வீட்டிற்கு அதிர்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும். இரவு நேரங்களில் துளசியை இருட்டில் விட்டுவிடக் கூடாது. அதனருகே சிறு மின் விளக்காவது எரியவிட வேண்டும். துளசியை வீட்டுத் தோட்டத்தில் வைக்கலாம் அல்லது ஒரு சிறிய தொட்டியில் வைத்து அதை பூஜை அறையில் வைக்கலாம்.

மல்லிகைச் செடி:

மல்லிகையின் மணத்துக்கு மயங்காதாரும் உண்டோ? தோட்டத்தில் இரவில் நிலாச் சிதறல் மாதிரி ஜொலிக்கும் மல்லிகைக் கொடியை சரியான திசையில் வைத்தால், அது நமது மன அழுத்தத்தைக் குறைத்து, இதமான மனநிலையை வழங்கும். ஆகவே மல்லிகைச் செடியை கிழக்கு திசையில், சூரிய ஒளி நன்கு படும்படி வைக்க வேண்டும்.

லில்லி:

வீட்டின் உள்ளே வளர்க்க ஏற்றது லில்லி செடி! இச்செடிக்கு காற்றைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மேலும் அதிக சூரிய வெளிச்சமோ பராமரிப்போ தேவைப்படாது. எனவே லில்லியை படுக்கை அறை அல்லது வரவேற்பறையில் வைக்கலாம். இப்பூவை சாப்பாட்டு மேசையின் நடுவில் நேர்மறை சக்திகளை வழங்குவதோடு, குடும்ப உறுப்பினா்களிடையே நல்ல பிணைப்பையும் ஏற்படுத்தும். இளஞ்சிவப்பு லில்லிக்குப் பதிலாக வெள்ளை நிற லில்லியை வைப்பது கூடுதல் நன்மை தரும்.

கொடிகள்:

வீட்டு பால்கனியி அல்லது வீட்டின் முன்பாக இருக்கும் தோட்டத்தில் கொடிவகைகளை வளா்த்து வந்தால், அதிக செல்வம் சேரும். குறிப்பாக மணி பிளான்ட் அல்லது கோல்டன் ஃபோட்டோஸ் செடிகளை வளா்ப்பது சிறந்த பலனளிக்கும்.

போன்சாய் :

வாஸ்துப்படி, போன்சாய் மரங்களை வீட்டினுள் வைக்காமல், வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் வளா்ப்பதே சிறந்தது என்பது வாஸ்து நிபுணா்களின் கருத்து. காரணம் – அவை தானாகவே உருவாவதில்லை. நிபுணர்களால் உருவாக்கப் படுகின்றன. எனவே போன்சாய் மரங்களின் வேர்கள் மற்றும் அதன் கிளைகளில் வேதிப் பொருள்கள் அதிகம் இருக்கக் கூடிய வாய்ப்புண்டு. அவை சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடும். எனவே போன்சாய் மரங்களை வீட்டுக்கு வெளியே வைப்பதே சிறப்பு என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :