• தினம் ஒரு குழம்பு

மிளகு குழம்பு


சாந்தி ஸ்ரீனிவாசன், அம்பத்தூர்

தேவையானவை:

மிளகு - 20

துவரம் பருப்பு - சிறிது

புளி -சிறிது

மிளகாய் - 2

உப்பு -தேவைக்கேற்ப

பூண்டு - 5 பல்

செய்முறை:

மிளகு துவரம்பருப்பு மிளகாய் புளி பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும் பின்னர் அவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, அரைத்த கலவையை அதில் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் சிறிது கருவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும் சிறிது நல்லெண்ணெய் சேர்க்கவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான மிளகு குழம்பு தயார்

Comments

MALAPALANIRAJ says :

செய்வது எளிது. மருத்துவ குணமோ அதிகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :