• தினம் ஒரு குழம்பு

அப்பளக் குழம்பு


கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தேவையானவை:

அப்பளம் - 7அல்லது 8

புளி - எலுமிச்சை அளவு

உப்பு - தேவைக்கு

சாம்பார் பொடி -3 ஸ்பூன்

வேர்க்கடலை - 1/2 கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

பெருங்காயக்கட்டி - 1துண்டு

மிளகாய் வற்றல் – 2

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் ஐந்தாறு ஸ்பூன் விட்டு (நல்லெண்ணெய் தான் பெஸ்ட்) முதலில் அப்பங்களை உடைத்து போட்டு பொரித்து எடுக்கவும். பின்னர் வேர்க்கடலை போட்டு வறுத்து கறுகாமல் உடனே கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகாயை கிள்ளிப்போட்டு, வெந்தயம் சேர்த்து வெடிக்க விடவும். அத்துடன் புளியை நீர்க்க கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு (அப்பளத்தில் உப்பு இருக்கும். எனவே பார்த்து சேர்க்கவும்) போட்டு, சாம்பார் பொடி, பொரித்த அப்பளங்களையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போக கொதித்ததும் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

நல்லெண்ணெயின் மணமும், அப்பளத்தின் சுவையும், வேர்க்கடலையின் ருசியும் ஆஹா இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்கத் தோன்றும்.

Comments

Lajshmi says :

Very tasty congrats easy to make for working people

R Savithri says :

Super mami. Very nice and tasty.

DEEPA B says :

அருமை

Divya says :

Came out very tasty and all family members loved it!! Thank you for the recipe.

Saradha R says :

Looks tasty. Hope i could taste it as it is mouth-watering. I will try it and see at home. You are very talented in all types of cooking- be it traditional or modern. Kudos.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :