• தினம் ஒரு குழம்பு

சிறு கீரை மசாலா குழம்பு


என். விலாசம் செல்வி, கோடம்பாக்கம்.

தேவையானவை:

சிறுக்கீரை 1 கட்டு,

சின்ன வெங்காயம் - பொடியாக வெட்டியது 1கப்,

பூண்டு- 10 பல்,

தக்காளி - 4,

துவரம் பருப்பு - 100 கிராம்,

மிளகு 2 தே கரண்டி,

சீரகம் 2 தே. கரண்டி,

மிளகாய் தூள் - 1 அல்லது 2 தே. கரண்டி,

புளி- நெல்லிக்காய் அளவு,

உப்பு- சுவைக்கு ஏற்ப,

பெருங்காயம், மஞ்சள் தூள் - 1தே.கரண்டி,

தேங்காய் துருவல்- 2 மேசைக்கரண்டி,

எண்ணெய் - தாளிக்க,

வடகம் போட்டு தாளிக்கலாம் அல்லது கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கலாம்.

செய்முறை : துவரம் பருப்பை மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். பருப்பு முக்கால் பங்கு வெந்ததும் சிறுகீரை சேர்த்து வேக விடவும். இரண்டும் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும். பருப்பு, கீரை கலவையுடன் மிளகு, சீரகம், மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்பு, கீரை தண்ணீர் வடித்ததை சேர்த்து, உப்பு, புளிக்கரைசல், மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வடகம் அல்லது கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்ததும் மசாலா கலந்த கீரை பருப்பு கலவை சேர்த்து நன்கு கொதுத்ததும் இறக்கி விடவும். சாதத்துடன் இந்த கீரை மசாலா குழம்பு மிகப் பிரமாதமாக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :