• தினம் ஒரு குழம்பு

பிட்ளை


ஜெயந்தி நாராயணன்.

தேவையானவை:

காய்கள்- பாகற்காய், கொத்தவரங்காய், சேனை, பச்சை சுண்டைக்காய், கத்தரிக்காய் அல்லது பிடித்த எந்த காயும் நறுக்கி வைக்கவும்.

வேகவைத்த வேர்கடலை.

வறுத்து அரைக்க:

உ. பருப்பு , மிளகாய் ,மிளகு தேங்காய், கருவேப்பிலை, பெருங்காயம்( தேவைக்கேற்ப)

செய்முறை:

துவரம்பருப்பு 1 டம்ளர் அளவு எடுத்து வேகவைக்கவும். புளி சிறிய எலுமிச்சை அளவு ஊற வைத்து கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து காய்களை போட்டு நன்கு வதக்கவும். புளி கரைத்து ஊற்றவும்.வேர்க்கடலையை சேர்க்க வும். நன்கு கொதித்தும் உப்பு தேவைக்கேற்ப போடவும். அரைத்து வைத்துள்ள தை சேர்க்க வேண்டும். நன்கு சேர்ந்து வந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கலக்கி கொதித்தும் இறக்கவும். பிட்ளை தயார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :