• தினம் ஒரு குழம்பு

வேர்கடலை குழம்பு


- ஜெகதா நாராயணசாமி, சென்னை.

தேவையானவை:

பச்சை வேர்கடலை -1கப்

தனியா - 1டேபிள்ஸ்பூன்

க.பருப்பு - 1ஸ்பூன்

உ.பருப்பு - 1ஸ்பூன்

மிளகாய் - 10

கடுகு - 1டீஸ்பூன்

ம.தூள் - 1டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்தூள் - 1ஸ்பூன்

வெந்தயம் - 1ஸ்பூன்

புளி - எலுமிச்சையளவு

கல் உப்பு – ருசிக்கு ஏற்ப.

நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

கொத்தமல்லி தழை - சிறிது,

பெருங்காயத்தூள் - 1டீஸ்பூன்

தண்ணீர் – தேவைக்கு

செய்முறை:-

வேர்கடலையை சூடான தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்து வடித்துவிட்டு வேறு தண்ணீர், ம.தூள், உப்பு போட்டு குக்கரில் 5விசில் விட்டு குழையாமல் வேகவிட்டு கொள்ளவும். வெறும் கடாயில், தனியா, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, அனைத்தையும் ஒன்றாக போட்டு சிவக்க வறுத்து ஆறினதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், மிளகாய், தாளித்தும வேகவைத்த வேர்க்கடலையை போடவும். சிறிது வதங்கியதும், ம.தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கல்லுப்பு போட்டு புளி கரைசல் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பிறகு அரைத்த பொடி,பெருங்காயத்தூள் போட்டு, கெட்டியானதும், கடைசியாக 1 ஸ்பூன் நல்லெண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கவும். மிகவும் வித்தியாசமான, "வேர்கடலை குழம்பு" தயார். சூடான சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி, நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Comments

MALAPALANIRAJ says :

மிகவும் எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது. நான் செய்து பார்த்துவிட்டேன். மிகவும் ருசியாக இருந்தது.

VaniGanapathy says :

எளிமையான செய்முறை. வித்தியாசமான குழம்பு. செய்து பார்க்கலாம்.

எம். வசந்தா. says :

சத்தானது சூப்பர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :