• தினம் ஒரு குழம்பு

ஆரஞ்சு பழத் தோல் குழம்பு:


- நளினி ராமச்சந்திரன், கோயம்புத்தூர்.

தேவையானவை:

நறுக்கிய ஆரஞ்சு பழத் தோல்_1/2 கப்

புளிக்கரைசல்_1/4 கப்

உப்பு_ தேவையான அளவு

பெருங்காயம்_ 1/4 டீ ஸ்பூன்

வறுத்து அரைக்க :

கடலைப்பருப்பு_1 டீ ஸ்பூன்

உளுத்தம்பருப்பு_1 டீ ஸ்பூன்

கொத்தமல்லி விதை_1 டீ ஸ்பூன்

மிளகாய் வற்றல்_ 2

கறுப்பு எள்_1 டீ ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்_1 டீ ஸ்பூன்

கடுகு_1/2 டீ ஸ்பூன்

மிளகாய் வற்றல்_2

வெந்தயம்_1/4 டீ ஸ்பூன்

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி, வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து மிக்ஸியில் கரகரவென அரைத்து வைக்கவும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, அத்துடன் நறுக்கிய ஆரஞ்சு பழத் தோலை போட்டு லேசாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்‌ ஆரஞ்சு பழத் தோல் வெந்ததும் மிக்ஸியில் அரைத்து கலவையை போட்டு கொதிக்க விடவும். பின் சிறிதளவு அரிசி மாவை தண்ணீரில் கலந்து இக்கலவையில் ஊற்றி கறிவேப்பிலை,பெருங்காயம் தூவி இறக்கினால் சுவையான ஆரஞ்சு பழத் தோல் குழம்பு தயார்.

Comments

MRS.NALINIRAMACHANDRAN says :

ஆரஞ்சு பழத் தோல் வெந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கலவையை போட்டு கொதிக்க விடவும்.....என திருத்திப் படிக்கவும். விட்டமின் "சி" நிறைந்த ஆரஞ்சு பழத்தோல் இந்த குழம்பில் இருப்பதால் இன்றைய கொரோனா காலத்தில் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஆரஞ்சு பழத் தோல் குழம்பு உதவும்.

பொ.பாலாஜிகணேஷ் says :

புதுமையாக உள்ளது.... தினம் ஒரு வெரைட்டி பாராட்டுக்கள் மங்கையர்மலரே.....

பா.கவிதா says :

செய்து பார்க்கணும்.....

Archana Krishnamoorthy says :

Unique recipe

Jayaraman says :

எளிமை. அருமை! ஆரஞ்சு தோல் குழம்பு, பலா கொட்டை சாம்பார், இதெல்லாம் அரிதாகி விட்டது.

வீ. கணேஷ் says :

அருமை புதுமையாக உள்ளது. பாராட்டுக்கள்

Kala Hari says :

மிகவும் அருமையான, புதுமையான ரெசிபி. ஆரஞ்சு தோலை இவ்வளவு நாட்களாக தூக்கி எறிந்துவிடும் பழக்கம் உள்ள நமக்கு, கொரோனாவை விரட்டி அடிக்க கொரோனா குழம்பை கொடுத்த , கோவை நாயகிக்கு எமது பாராட்டுக்கள்.

Thiripurasundari says :

Super receipe

Krishnamoorthy says :

Super receipe and healthy... Useful tips... பாராட்டுக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :