• தினம் ஒரு குழம்பு

அச்சு பிச்சு குழம்பு ( திடீர் குழம்பு)


V. ஸ்ரீவித்யா, நங்கநல்லூர்





தேவையானவை:

வறுத்து அரைக்க:

தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு-தலா ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு மற்றும் சீரகம்- தலா அரை டீ ஸ்பூன்

வர மிளகாய்- நான்கு

வெந்தயம்-ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை- ஒரு ஆர்க்கு

புளி- அரை எலுமிச்சை அளவு

தக்காளி (விரும்பி னால்) - 2

பெருங்காயம் மற்றும் வெல்லம்- தேவையான அளவு

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

உப்பு ருசிக்கு ஏற்ப

தாளிக்க:

எண்ணெய்-50 கிராம்

கடுகு மற்றும் உளுந்து

தண்ணீர்-2 லி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விடாமல் நான் கொடுத்த வரிசை கிரமப்படி வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றை வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.

மீண்டும் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுந்து தாளித்து காய்கறி களை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இதனுடன் தண்ணீர் ஊற்றி 5 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்

வறுத்த பொடி சேர்த்து மீண்டும் 5நிமிடத்திற்கு கொதிக்க விடவும் (பொடியுடன் உப்பு, புளி சேர்த்து பொடி செய்து கொள்ளவும்). சிறிது கெட்டி பட்டதும் இறக்கி வைத்து பரிமாறவும். பருப்பு குழம்பு போலவே ருசியாக இருக்கும்

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

வித்தியாசமா இருக்கு..... சூப்பர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :