• தினம் ஒரு குழம்பு

வடை மோர் குழம்பு


சுந்தரி காந்தி, பூந்தமல்லி

தேவையானவை:

கடலைப் பருப்பு – 50 கிராம்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

மல்லி தூள்– 1 ஸ்பூன்

இஞ்சி துருவல் – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

காய்ந்த மிளகாய் – 2

தேங்காய் துருவல்- 5 ஸ்பூன்

மல்லி இலை, கருவேப்பிலை

தயிர் – 2 கப்

கடுகு- சிறிது

உப்பு- தேவைக்கு

எண்ணெய் - பொரிக்க, தாளிக்க

செய்முறை

அரை மணி நேரம் ஊறவைத்த கடலை பருப்புடன் 2 பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை பருப்பு மாவினை வடையாக தட்டி பொறித்து எடுக்கவும்.

தயிரை கடைந்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். கடுகையும் காய்ந்த மிளகாயும் தவிர மீதமுள்ள எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து தயிருடன் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து லேசாக பொங்கி வரும்போது இறக்கவும். பின் கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து தயிர் கலவையில் சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இரண்டையும் போட்டு கலக்கி மூடி வைக்கவும். பொரித்து வைத்திருக்கும் வடையை சூடான மோர் குழம்பில் சேர்த்தால் சுவையான வடை மோர் குழம்பு தயார்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அடடே பிரமாதம்

R.Meenalatha says :

Looks yummy.

Sowmya Subramanian says :

Super. Very tasty.

V.Avoudainayagam says :

தடையில்லாமல் சாப்பிடலாம் more குழம்பு

Murugesan says :

Super menu.

T. KAVITHA THAMARAISELVAN says :

இது புது விதமாகவும்,ஈஸியான ரெசிபியாகவும் உள்ளது. எங்களுடன் பகிர்ந்துதைக்கு கல்கிக்கு நன்றி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :