• JUST IN | சுட சுட

ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடி: ஃபேஸ்புக் தயாரிப்பு அறிவிப்பு!





பிரபல சமூகவலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம், ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ்கள் தயாரிக்கப் போவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தன் நிறுவனத்தின் சமீபத்திய வருவாய் கூட்டத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது:

நம் அடுத்த தயாரிப்பு ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் கண்ணாடிகளை தயாரித்து அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள், வர்ச்சுவல் ரியாலிடி உலகில் பெரும் பங்கு வகிக்கும். இந்த பிராண்டட் கண்ணாடிகள், எதிர்காலம் சார்ந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்குவதற்கான முதல் படியாக கருதப்படுகிறது. இது இன்டர்நெட்டிலிருந்து டேட்டா அல்லது கிராபிக்ஸ் மூலம் உண்மையான உலகத்தை (real world) பெரிதாக்குகிறது. பிராங்கோ-இத்தாலிய நிறுவனத்தால் தயாரிக்கப்பட உள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் எப்போது தயாராகி வெளியாகும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிடவில்லை..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :