• JUST IN | சுட சுட

ஆட்டம் தொடங்கிவிட்டது: மம்தா பானர்ஜி அதிரடி!





மத்திய அரசில் பாஜக-வுக்கு எதிராக உருவாகும் கூட்டணியின் தலைவர் யார் என்பது, சூழ்நிலையை பொறுத்து விரைவில் முடிவாகும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்ற பின் மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இப்பயணத்தின் தொடக்கமாக பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக மம்தா சந்தித்தார்.

பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதையடுத்து, பாஜகவுக்கு எதிரான அணிக்கு தலைமை வகிக்கப்போவது யார் என செய்தியாளர்கள் மம்தாவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு செய்தியாளர்களிடம் மம்தா தெரிவித்ததாவது:

பாஜக-வுக்கு எதிரான கூட்டணிக்கு தலைவர் யார் என்பது, சூழ்நிலையை பொறுத்து விரைவில் முடிவாகும். அப்படி யார் தலைவராக வந்தாலும் எனக்கு சம்மதம்தான். மொத்தத்தில் பிஜேபி என்ற பூனைக்கு மணி கட்டுவதுதான் தனக்கு முக்கியம்.

-இவ்வாறு மம்தா தெரிவித்தார். மேலும் சமீபத்தில் மேற்கு வங்காள சட்டமனறத் தேர்தலை "ஆட்டம் தொடங்கிவிட்டது" என்ற முழக்கத்துடன் தங்கள் கட்சி எதிர்கொண்டதாகவும், அதேபோல அடுத்து வரும் மக்களவை தேர்தலிலுல் அந்த கோஷம் நாடெங்கும் எதிரொலிக்கும் என்றும் மம்தா குறிப்பிட்டார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:

பாஜக எண்ணிக்கையில் பெரிதாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக வலிமையாக இருக்கிறார்கள். அக்கட்சிகள் ஒன்றாக இணைந்தால் வரலாறு உருவாகும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தியும் விரும்புகிறார். அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

-இவ்வாறு மம்தா தெரிவித்தார்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :