• JUST IN | சுட சுட

நான் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறேன்: நடிகை ஷகீலா!





பிரபல நடிகை ஷகிலா தான் உயிரிழந்ததாக பொய்யான செய்திகளை சிலர் பரப்புவதாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகை ஷகிலா தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம் வந்து பிரபலம் அடைந்தார்.தமிழில் தூள், வாத்தியார், பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் ஷகீலா இறந்துவிட்டதாகச் சிலர் இணையத்தில் செய்திகள் பரப்ப, அதனால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஷகீலா தான் நலமுடன் இருப்பதாக காணொலி ஒன்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

பொய்யான செய்தியைப் பரப்பியவருக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, நான் இறந்துவிட்டதாகச் சில செய்திகளைக் கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட பொய்யான செய்தியைப் பரப்பியவருக்கு நன்றி. நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, பெரிய புன்னகையுடன் இருக்கிறேன். நான் இறந்ததாக பரப்பிய வதந்தியைக் கேள்விப்பட்டு, பலர் என்னை அழைத்து விசாரித்தார்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. அந்த சோகமான செய்தியைப் பரப்பிய நபருக்கும் நன்றி. ஏனென்றால் அவர்தான் உங்கள் பார்வையை மீண்டும் என் பக்கம் திருப்பியிருக்கிறார்.

-இவ்வாறு ஷகிலா தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :