• JUST IN | சுட சுட

வேலூர் தபால் நிலையம்: ஒலிம்பிக்ஸில் வென்ற மீராபாய்க்கு வாழ்த்து சொல்ல தனி கவுன்டர்!





ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவிக்க, வேலூர் தபால் நிலையத்தில் சிறப்பு கவுன்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு (26), வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். அவருக்கு, நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் மாவட்ட மக்களும் மீராபாய் சானுவுக்கு பாராட்டு தெரிவிக்க வசதியாக, வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் தனி கவுன்ட்டர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கவுன்ட்டர், நாளை (31ம் தேதி) வரை செயல்படும்.

இதில், தந்தி அனுப்புபவர்களின் முகவரி மற்றும் அதற்கான கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு, மீராபாய் சானுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. வாழ்த்து செய்தி அனுப்பும் பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு, தந்தி அனுப்பிய குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது என, தபால் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :