• JUST IN | சுட சுட

+2 சிபிஎஸ்சி ரிசல்ட் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!





12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவியதையடுத்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் முதலில் தள்ளி வைத்தது. அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இதுவரை வெளியிடப் படவில்லை.

இந்நிலையில் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குமேல் வெளியிடப் படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. மாணவர்கள் தம் தேர்வு முடிவுகளை cbse.nic.in மற்றும் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்கள் முடிவுகளை டிஜிலாகரிலும் சரிபார்க்கலாம். இந்த அறிவிப்பை மத்திய இடைநிலை கல்வி வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :