• TRENDING | பர பர

திட்டம் இரண்டு: திரைப்பட விமர்சனம்!





பெண்மையை பற்றியும், ஆண் பெண்ணாக மாற்றம் அடையும் போது ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் நம் சினிமா நிறைய பேசி உள்ளது. ஆனால் ஒரு பெண் ஆணாக மாறும் போது ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளை தமிழ் சினிமா பேசியதில்லை.

முதல் முறையாக ஒரு பெண்ணுக்குள் இருக்கும் ஆண் தன்மையை பற்றி திட்டம் படம் சொல்கிறது.படத்தின் முதல் காட்சியில் ஒரு கொலை நடக்கிறது. அடுத்த காட்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு பயணம் ஆகிறார்.பஸ்சில் ஒரு வாலிபனை சந்திக்கிறார். அந்த பையனுடன் காதல் வய படுகிறார்.நகரில் நடக்கும் ஒரு கொலையை பற்றி போலீஸ் அதிகாரியான ஐஸ்வர்யா விசாரிக்கிறார்.கொலை செய்யப்பட்டது தனது பள்ளி தோழி தீப சூர்யா என்று தெரிய வருகிறது.ஒரு கட்டத்தில் கொலை செய்யபட்டது தன் தோழி அல்ல. வேறொரு பெண் என்றும் தெரிய வருகிறது.

இதன் மர்ம முடிச்சுக்கள் அனைத்தும் கிளைமாக்ஸ் காட்சியில் அவிழ் கின்றது.காட்சிக்கு, காட்சி பரபரப்பும், கதையை நகர்த்தி கொண்டு போன விதமும் புதுமையாக உள்ளது. இவன் தான் கொலைகாரன் என்று ஒருவனை கைது செய்த பின்பு, கைது செய்யப்பட்ட நபர் கொலையாளி அல்ல என்று தெரிய வரும் போது திரைகதையில் பரபரப்பு கூடி விடுகிறது.

சிக்கலான, நம் சமுகத்தில் பேச தயங்கும் ஒரு விஷயத்தை, சஸ்பென்ஸ் திரில்லலர் தளத்தில் சொன்னதற்கு டைரக்டர் விக்னேஷ் கார்த்திக்கை பாராட்டலாம். போலீஸ் அதிகாரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கம்பீரமான அழகில் இருக்கிறார். விசாரணை போது பரபரப்பாக செயல் படுவதும் காதல் காட்சியில் கரைவதும் என வெவ்வேறு தளங்களில் நடிப்பை வெளிபடுத்துகிறார். தமிழ் சினிமாவில் பன்முக நடிப்பை தரும் நடிகை ஐஸ்வர்யா. தீப சூரியவாக வரும் அனன்யா ராம் பிரசாத் இயலாமை, கோபம் இரண்டையும் கலந்து வெளிப்படுத்து கிறார்.கோகுல் ஒளிப்பதிவு காட்சியின் சஸ்பென்ஸ் லெவலை உயர்த்துகிறது.

சதிஷ் ரகுநாதனின் பின்னணி இசை சிறப்பு. பெற்றோர்கள்,தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டிய காலம் இது என உணர்த்தும் படம் இது.சிக்கலான விஷயத்தை நாசூக்காக கையாண்ட இயக்குனருக்கு நல்ல எதிர் காலம் உள்ளது. திட்டம் இரண்டு -பாடம் -ராகவ் குமார்

Comments

கே.ஆர். உதயகுமார், சென்னை - 1. says :

பட விமர்சனம் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும்படி இருக்கின்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :