• TRENDING | பர பர

சூரியனை படம்பிடித்து நாசா வெளியிட்ட பதிவு: வைரலாகும் வீடியோ!





சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடிக்கும் கொரோனல் மாஸ் எஜக்ஷன் பதிவை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

சூரியன் பற்றி தகவல்களை லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தின் வசதியை பயன்படுத்தி விஞ்ஞானிகள் வீடியோ படம் எடுத்து நாசா வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெடிக்கும் ஒரு கொரோனல் மாஸ் எஜக்ஷன் (சிஎம்இ) பதிவை காட்டுகிறது. ‘’சூரிய குடும்பத்தைப் பற்றிய எங்கள் ஆய்வு.. ஒரு நட்சத்திரம்’’ என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேலும் சூரியனின் வெப்ப உமிழ்வு (சி.எம்.இ) பற்றிய கூடுதல் தகவல்களையும் நாசா விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். "சூரிய பிளாஸ்மாவின் அலைகள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1 மில்லியன் மைல் அல்லது 1,600,000 கிலோமீட்டர் வேகத்தில் விண்வெளியில் சுடுகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ பதிவை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், இதைக் காண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "இது ஒரு உண்மையான காட்சியா?" என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் கேட்டார். அதற்கு நாசா, "ஆம் எங்கள் சூரிய இயக்கவியல் ஆய்வகம் அதை ஒளி வடிப்பான் மூலம் படம் பிடித்துள்ளது’’ என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

Instagram : https://www.instagram.com/p/CR4tKCClMP1/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :