• TRENDING | பர பர

330 அடி உயர ராட்சத புழுதி புயல்: சீனாவில் மக்கள் அவதி!





சீனாவில் 330 அடி உயரத்துக்கு எழுந்த புழுதி புயலால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சீனாவின் டுன்ஹுவாங் நகரில் 330 அடி உயரத்துக்கு உருவான ராட்சத புழுதி புயல் வானில் பிரமாண்ட மண் சுவர் கட்டியெழுப்பப்பட்டது போல் காட்சியளித்தது.

வடக்கில் இருந்து தென் திசை நோக்கிச் சென்ற இந்தப் புழுதி புயல் காரணமாக தேசிய நெடுஞ்சாலை மண் புழுதி சூழ்ந்து முற்றிலுமாக மூடி மறைந்தது. மேலும் கண்ணெதிரே வரும் வாகனங்களை கூட காண முடியாத சூழலால் பெரும் விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து வாகன ஓட்டிகள் கார்களை சர்வீஸ் சாலையில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்

சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை வெள்ளம் ஏற்பட்டு, அம்மக்கள் கடும் அவதிக்குள்ளாகிய நிலையில் இந்த மாபெரும் புழுதிப் புயல் மேலும் அச்சத்தைக் கிளப்பியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :