• TRENDING | பர பர

ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த அரசு பாடல்!





ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் `வென்று வா வீர்ர்களே` என்ற பாடலுக்கான ஹேஷ் – டேக்கை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் இதுகுறித்து தெரிவித்தாவது:

.

தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வாள் வீச்சுப் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, எதிர்காலத்தில் தங்கம் வெல்வார் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்தில் 4 ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து 6 முதல் 16 வயதுக்கு உபட்டவர்களுக்கு உலகத் தரமான பயிற்சியளிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். மேலும் தடகள வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமி ஆகியோருக்கு அரசுப் பணிக்கான ஆணையை முதல்வர் வழங்கவிருக்கிறார்.

- இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Twitter : : https://twitter.com/i/status/1419612168270405632

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :