• TRENDING | பர பர

பெல்லி ஆர்ட்தான் ஃபேஷன்: 7 மாத கர்ப்பிணி நடிகை !





தமிழ் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் பரீனா ஆசத் என்ற நடிகை. 7 மாத கர்ப்பிணீயாக இருக்கும் பரீனா, தன் வயிற்றில் ஓவியங்கள் வரைந்து, அவற்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார். பரீனாவின் இந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அஞ்சறைப் பெட்டி நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் விஜய் டிவி-யில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் 7 மாத கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்தார். அதில் ’’கர்ப்பமாக உள்ளேன். இன்னும் 3 மாதங்கள் உள்ளது. குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். 4 வருட கனவு நனவாகி உள்ளது’’ என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும் தன் கர்ப்பகால பெரிய வயிறு தெரியும்படி விதவிதமாக போட்டோஷூட் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயிற்றில் மருதாணி ஆர்ட்டை போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ’’பெல்லி ஆர்ட்தான் இப்ப ஃபேஷன்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பதறீப் போயுள்லனர். மருதாணி போட வேற இடமா கிடைக்கலை? பாவம்.. வயிற்றுக்குள்ளிருக்கும் பாப்பா என்று ஒருசிலர் கண்டனம் தெரிவித்தாலும், இந்த படங்கள் செம வைராலாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :