• SPARKLES | மினுமினு

சார்பட்டா பரம்பரை: சர்ரென்று ஏறியது ஆர்யாவின் மவுசு!


- ஸ்வப்னா கிருஷ்ணா





நடிகர் ஆர்யாவுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு என்றூதான் சொல்ல வேண்டும். அவரது சொந்த தயாரிப்பில் உருவான டெடி திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தை குழந்தைகள் விரும்பி ரசித்துப் பார்த்தனர்.

அதையடுத்து, இப்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள சார்ப்பட்ட பரம்பரை திரைப்படம் அமோக வெற்றி பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் குத்துசண்டை வீரராக நடித்துள்ள ஆர்யாவின் கடுமையான உழைப்பு அனைவராலும் பாராட்டப் படுகிறது.

இயக்குனர் பா. ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் கதையானது 70-களில் வடசென்னையில் கோலோச்சிய குத்துசண்டை வீரரகள் பற்றியது! அப்படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளர் ரங்கன் வாத்தியாரின் (பசுபதி) சார்பட்டா பரம்பரை டீமுக்கும் மற்றொரு குத்துசண்டை பயிற்சியாளர் துரைக்கண்ணு வாத்தியாரின் (ஜி.எம். குமார்) இடியாப்ப பரம்பரை டீமுக்கும் இடையேயான போட்டிதான் இப்படத்தின் கதைக் கரு.

சார்பட்டா பரம்பரையின் பயிற்சியாளரான ரங்கன் வாத்தியார் ஏற்றுக்கொள்ளும் ஒரு பெரிய சவாலை நிறைவேற்ற கபிலன் – அதாவது நடிகர் ஆர்யா களமிறங்குகிறார். அதற்கு ஏற்படும் தடைகள், இடையில் குறுக்கிடும் தமிழக அரசியல் சூழ்நிலை, திசைமாறும் கபிலன் வாழ்க்கை என ஒரு சுவாரசியமான படமாக அமைந்திருக்கிறது சார்பட்டா பரம்பரை.

இதில் கபிலனாக அசத்தலாக நடித்து அசால்ட்டாக புகழ் தட்டிச் செல்கிறார் ஆர்யா!

இதையடுத்து இன்னும் 3 படங்கள் ஆர்யாவின் நடிப்பில் வெளீயாக வரிசைகட்டி வருகின்றன. இஐ பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி, ஆர்யாவின் மவுசை எகிற வைத்திருக்கிறது. அந்த வகையில் எனிமி என்ற படமும் அரண்மனை-3 படமும் செப்டம்பரில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்துள்ளார். இதில கதாநாயகனாக விஷால் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதே போல சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மணை3 படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். இதையடுத்து கோலிவுட்டில் மீண்டும் கோலோச்சத் தயாராகி விட்டார் ஆர்யா!

Comments

கே.ஆர். உதயகுமார், சென்னை - 1. says :

மேலும் ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அதற்கும் சேர்த்து ஆர்யாவை வாழ்த்துவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :