• தினம் ஒரு பாயசம்

பேரீச்சம்பழ பாயசம்:


கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தேவையானவை:

கொட்டை நீக்கிய பழம் 1கப்

பயத்தம் பருப்பு 1/4 கப்

பால் 2 கப்

ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

நாட்டு சர்க்கரை 4 ஸ்பூன்

(அவரவர் தேவைக்கேற்ப கூட்டியோ

குறைத்தோ)

முந்திரி பருப்பு 10.

செய்முறை:

பேரீச்சம் பழத்தில் 5 தனியாக எடுத்து வைத்து விட்டு மீதியை மிக்ஸியில் கூழாக அரைத்து விடவும். அந்த ஐந்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

பயத்தம் பருப்பை குழைய வேக விட்டு நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். அத்திடன் பேரீச்சம் பழக்கூழ், ஏலப்பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம். அத்துடன் பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கடைசியாகப் பாலையும் சேர்க்க சுவையான, சத்தான பாயசம் ரெடி.

பேரீச்சம் பழத்தில் இரும்பு சத்து கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்அதிகம் உள்ளது. மூட்டுத் தேய்மானம், எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கும். கண் பார்வை திறன் கூடும். கண் புரை ஏற்படுவதைத் தடுக்கும்.

Comments

Saradha R says :

A very healthy and delicious payasam. This can be given to growing up girls ,especially, as it improves their iron content in their body. Thanks for sharing this yummy treat.

வி.கலைமதிசிவகுரு says :

பேரித்தம்பழ பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :