• தினம் ஒரு பாயசம்

கொழுக்கட்டை பாயாசம்.


ஷெண்பகம் பாண்டியன், வேலூர்.

தேவையானவை:

அரிசி மாவு: 1 கப்

தேங்காய் பால்: 1 கப்

வெல்லம்: ஒன்றரை கப்

ஏலக்காய் சிறிது

முந்திரி, திராட்சை தேவையான அளவு.

நெய் சிறிது.

அரிசி மாவில் திட்டமாக தணீர் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். வாணலியில் 2 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அத்துடன் அரிசி மாவு உருண்டைகளை சிறிது சிறிதாக போடவும் .அவை வெந்து மேலாக வரும். மொத்த உருண்டைகளையும் சேர்த்து அவை வெந்தபின், கரைத்த வெல்லம்,பின் திக்கான தேங்காய் பால் ஊற்றி இறக்கவும். பின்னர், முந்திரி,திராட்சை நெய்யில் வறுத்துச் சேர்த்து ஏலக்காய் தூவவும். ஆறிய பின் சாப்பிட ருசியாக இருக்கும்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அடடே வித்தியாசமா இருக்கே....

எம். வசந்தா. says :

சுலபமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான பாயசம். அருமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :