• தினம் ஒரு பாயசம்

கோதுமை ரவை பாயசம்


மாலதி நாராயணன், சென்னை.

தேவையானவை:

கோதுமை ரவை:: 1-கப்

பொடித்த வெல்லம்: 1/2 கப்

பால்: 2 கப்

நெய்: -2 ஸ்பூன்

முந்திரி பருப்பு: 10

திராட்சை: 10

ஏலக்காய்: சிறிதளவு

செய்முறை::

கோதுமை ரவையை சிறிது நெய்யில் நன்றாக வறுத்து எடுக்கவும்

இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் வறுத்த ரவையை போட்டு நன்றாக வேகவிடவும் வெந்தவுடன் வெல்லம் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் நன்றாக கொதித்து கெட்டியானவுடன் பாலை விட்டு ஒரு கொதி வந்தவுடன் ஏலப்பொடி போட்டு நன்கு கலந்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்

சுவையான சத்துக்கள் நிறைந்த பாயசம் ரெடி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :