• தினம் ஒரு பாயசம்

தினையரிசி பாயசம்


ஜெயா சம்பத் கொரட்டூர்

தேவையானவை :

தினையரிசி -1கப்

வெல்லம் -சுவைக்கேற்ப

தேங்காய்ப்பால் -1கப்

நெய் -1கரண்டி

முந்திரி, திராட்சை சிறிதளவு.

செய்முறை :

தினையரிசியைக் கழுவி, வடிகட்டி ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து, 1:2 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வேக விடவும். வெந்ததும் வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். கீழே இறக்கி வைத்து, தேங்காய்ப்பால் சேர்க்கவும். இறுதியில் நெய்யில் வறுத்த கொப்பரைத் துண்டுகள், முந்திரி, திராட்சை சேர்த்தால், சுவையான ஆரோக்கியமான பாயசம் தயார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :