• தினம் ஒரு பாயசம்

தேங்காய், பச்சரிசி பாயசம்:


ஆர். பிருந்தா இரமணி, மதுரை

தேவையானவை:

பச்சரிசி - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1 மூடி

பொடித்த வெல்லம் - 3/4 கப்

ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு - 10

கிஸ்மிஸ் - 10

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

பால் - 1 டம்ளர்

செய்முறை:

அரிசியைக் களைந்து தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும். இந்த விழுதை 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். வெந்ததும் வெல்லத்தைப் போட்டுக் கிளறவும். வெல்லம் சேர்ந்து வந்ததும் பால், ஏலக்காய் தூள் போட்டுக் கலந்து இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் போட்டுக் கலந்து பரிமாறவும். சுவையான தேங்காய், பச்சரிசி பாயசம் ரெடி!

பின்குறிப்பு: * வெல்லத்தில் கல், மண் இருக்கும் என்றால் அடுப்பில் அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வைத்துக் கரைந்ததும் எடுத்து வடிகட்டி விடவும்.

Comments

Sundari says :

Nice

பொ.பாலாஜிகணேஷ் says :

அருமை....

எம. வசந்தா says :

சுவையான சத்தான பாயசம் அருமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :