• JUST IN | சுட சுட

தமிழகத்தில் இன்றுமுதல் நூலகங்கள் திறப்பு: அரசு அறிவிப்பு!





தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகத்தையும் இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் மூடப்பட்ட நூலகங்களைத் திறக்கக் கோரி பொதுமக்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தனர். .

அத்துடன் போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் பொது நூலகத்துறை கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் விதிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் திறக்க அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் செயல்படும் நூலகங்கள் திறப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :