• JUST IN | சுட சுட

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!





டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து போட்டியில் பங்கேற்று கலக்கி வருகின்றனர். தற்போது ஹாக்கி அணி வெற்றிபெற்றுள்ளது. இந்திய ஹாக்கி அணி `ஏ` பிரிவில் இடம் பிடித்துள்ளது.

இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் 10-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் கால் பகுதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஹர்மன்ப்ரீத் சிங் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.

3-வது காலிறுதி ஆட்டத்தில் 26-வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால் நியூசிலாந்து அடுத்த நிமிடத்தில் (27-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தது. இதனால் 3-வது காலிறுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.

4-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :