• JUST IN | சுட சுட

+ 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு!





தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று விண்ணப்ப பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் சமீபத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில் 100% தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் +2 தேர்வுக்கான் மதிப்பெண்கள் தசம முறை கணக்கீட்டின்படி வழங்கப்பட்டன. இந்நிலையில் +2 தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், மீண்டும் தனித்தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதன்படி இன்று முதல் 27-ம் தேதிவரை மாவட்டவாரியாக அரசு தேர்வுத்துறை சேவைமையம் மூலமாக மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்றும் அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது.

விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ம் தேதிமுதல் 19-ம் தேதிவரை நடைபெறும் என தெரிவித்துள்ளது..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :