• TRENDING | பர பர

விரைவில் அறிமுகமாகிறது பறக்கும் கார்!





உலகெங்கும் சாலை ட்ராபிக் மற்றும் எரிபொருள் செலவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பறக்கும் கார்களை தயாரிக்க பிரபல கார் நிறுவனம்கள் விரும்புகின்றன. அந்த வகையில் நெதர்லாந்தில் முதன்முதலாக PAL - V மாடல் பறக்கும் கார் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த கார் சாலையில் செல்லும்போது சாதாரண ஸ்போர்ட்ஸ் கார் மாதிரி இருப்பினும், இமைக்கும் நேரத்தில் டேக்-ஆஃப் ஆகி விமானமாக விண்ணில் பறக்கும் வாகனமாக மாறிவிடும்

இந்த பறக்கும் காரை சொந்தமாக வாங்குவதற்கு அமெரிக்கா பணமதிப்பில் சுமார் 742,498 டாலர் செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. மேலும் முதன்முதலில் இந்த பறக்கும் கார்கள் சந்தையில் அறிமுகம் ஆகும்போது அதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாயாக இருக்குமாம். இந்த தொகையானது காரின் அடக்கவிலை மட்டுமின்றி எரிபொருள் பயன்பாடு, கார் பயிற்சி கட்டணம், காப்பீடு, பார்க்கிங் கட்டணம் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். இதற்கு உரிமம் பெறுவதற்கு 37,19௦ டாலர் செலவாகும். இந்த பறக்கும் கார்கள் ஓட்டும் முன்னனுபவம் இல்லாதவருக்கு காப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றால் அவரின் காப்பீட்டுத்தொகை 17,810 டாலராகும். இதனை அடுத்து பறக்கும் காரை உரிமையாக்கி கொள்ள ஆகும் விலை 6 கோடியே 93 ஆயிரம் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :